திறந்தவெளியில் உச்சா அடித்து வம்பில் மாட்டிய ராஜஸ்தான் மந்திரி

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநில அரசுகள் தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடும் நிலையில் ராஜஸ்தான் மந்திரி திறந்தவெளியில் சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திறந்தவெளியில் உச்சா அடித்து வம்பில் மாட்டிய ராஜஸ்தான் மந்திரி
Published on

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தராராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசு தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி வருவதாகவும், இதன் விளைவாக இங்குள்ள 33 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் திறந்தவெளி கழிப்பிடங்களால் இல்லாத மாவட்டங்களாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அஜ்மீர் நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பேரணியில் பங்கேற்ற அம்மாநில மந்திரி ஷாம்பு சிங் கேட்டசர், திறந்தவெளியில் ஒரு மதில் சுவரின் மேல் சிறுநீர் கழிக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. குறிப்பாக, அவர் சிறுநீர் கழிக்கும் இடத்தின் மிக அருகாமையில் பா.ஜ.க. போஸ்டர் ஒன்றும் காணப்படுகிறது.

இதுதான், திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்ட தூய்மை இந்தியா என்னும் அடைமொழியுடன் சமூகவலைத்தளங்களில் பதிவாகிவரும் இந்த புகைப்படம் தொடர்பாக ஷாம்பு சிங் கேட்டசர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com