

200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது.