உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்- ராஜன்செல்லப்பா பங்கேற்கிறார்

மேலூரில் நாளை மறுநாள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பங்கேற்கிறார்.
ராஜன் செல்லப்பா எம்எல்ஏ.
ராஜன் செல்லப்பா எம்எல்ஏ.
Published on

மதுரை:

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது ஆணைக்கிணங்க மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் மேலூர் சந்தைப் பேட்டையில் நாளை மறு நாள் (14-ந்தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பான ஆலோசனை வழங்கப்படுகிறது.

எனவே இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நகர், பேரூர், வட்ட, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண் டர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com