திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் - ஆ.ராசா பேட்டி

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி தற்போது நலமாக உள்ளார் என ராசா தெரிவித்துள்ளார். #Karunanidhi #DMK #Raja
திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் - ஆ.ராசா பேட்டி
Published on

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தகவலறிந்து ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து மு.க.ஸ்டாலின் மீண்டும் கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். காவேரி மருத்துவமனை சார்பில் மருத்துவ குழுவினரும் வந்தனர்.

அதன்பின்னர், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி நலமாக உள்ளார் என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தமிழின தலைவர் கலைஞருக்கு திடீரென ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் நலமாக உள்ளார். இதுகுறித்து மருத்துவமனை குழுவினர் அறிக்கை அளிக்க உள்ளனர். எனவே தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com