“குஜராத்தில் வாக்குறுதி மழை பெய்யும்” மோடியின் பயணம் குறித்து ராகுல் காந்தி கிண்டல்

“வானிலை முன்னறிவிப்பு, குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி அங்கு வாக்குறுதி மழை பெய்யும்” என மோடியின் பயணம் குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
“குஜராத்தில் வாக்குறுதி மழை பெய்யும்” மோடியின் பயணம் குறித்து ராகுல் காந்தி கிண்டல்
Published on

புதுடெல்லி:

குஜராத் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அண்மையில் இமாசலபிரதேச சட்டசபைக்கு தேர்தல் தேதியை(டிசம்பர் 9 மற்றும் 18) அறிவித்த தேர்தல் கமிஷன் குஜராத்துக்கு அறிவிக்கவில்லை. இரு மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தாததற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்தநிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, மோடியின் நேற்றைய குஜராத் பயணம் குறித்து நேற்று காலை டுவிட்டரில் கிண்டல் செய்தார். அதில், “வானிலை முன்னறிவிப்பு, குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி அங்கு வாக்குறுதி மழை பெய்யும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இன்னொரு டுவிட்டர் பதிவில், “தேர்தல் தேதிக்காக காத்திருக்கும் குஜராத் மாநிலத்துக்கு ரூ.12,500 கோடி மதிப்பிற்கு திட்டங்கள் கிடைக்கும்” என்று கேலி செய்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com