காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ராகுல் காந்தி நான்கு நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். #RahulGandhi
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கலந்துரையாடுகிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார். இரண்டு நாட்கள் அவர் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துப் பேசுகிறார். மேலும், ஹம்பர்க் மற்றும் பெர்லின் நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் பேசவுள்ளார்.

அதைத்தொடர்ந்து, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இங்கிலாந்து செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடுவதுடன், பிரபல வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ராகுல் செல்லும் 2வது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.

கடந்த செப்டம்பரில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய பொருளாதாரம், வேலைவாய்ப்பில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்திய வம்சாவளியினருடன் ராகுல் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com