ராகுல் காந்தி 24-ம் தேதி அமேதி தொகுதிக்கு செல்கிறார்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 24-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #RahulGandhi #RahulAmethivisit
ராகுல் காந்தி 24-ம் தேதி அமேதி தொகுதிக்கு செல்கிறார்
Published on

லக்னோ:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் நலத்திட்டங்களை பார்வையிடவும், மக்களின் குறைகளை கேட்டறிவதற்காகவும் வரும் 24-ம் தேதி அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின்போது அமேதி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின்போது கவுரிகஞ்ச் நகரில் அமேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அம்மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர், காங்கிரஸ் பொறுப்பாளர்களையும், பொதுமக்களையும் சந்திப்பார் என அமேதி மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திரா மிஸ்ரா இன்று தெரிவித்துள்ளார். #RahulGandhi #RahulAmethivisit

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com