காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி அடுத்த வாரம் அறிவிப்பு

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார். தலைவருக்கான சான்றிதழை ராகுல்காந்தி வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதிக்குள் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published on

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி கடந்த 17 ஆண்டுகளாக கட்சி தலைவர் பதவியை வகித்து வருகிறார்.

சமீபகாலமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கட்சியின் முக்கிய முடிவுகளை அவரது மகனும், கட்சியின் துணைத் தலைவருமான ராகுல்காந்தி எடுத்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து அவரை கட்சி தலைவராக அறிவிக்க வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு காரிய கமிட்டி சமீபத்தில் அறிவித்தது. அதன்படி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராகுல்காந்தி கடந்த 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ராகுல் காந்தி ஒருமனதாக காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.


காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்.

காங்கிரஸ் தலைவருக்கான சான்றிதழை ராகுல் காந்தி வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதிக்குள் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com