காஷ்மீர் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்- ஜிகே வாசன்

காஷ்மீர் புல்வாமாவில் மத்திய படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #PulawamaAttack #GKVasan
காஷ்மீர் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்- ஜிகே வாசன்
Published on

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் திருப்பூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காஷ்மீர் புல்வாமாவில் மத்திய படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. அதற்கான தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

பயங்கரவாதத்தை முறியடிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்த கருத்தோடு, ஒன்று சேர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா. பலத்தை அங்கீகரிக்கக்கூடிய கட்சியுடன் கூட்டணி வைப்போம். தமிழகத்தின் எதிர்காலத்துக்கு காமராஜர் ஆட்சி தான் அடித்தளம் என்பதை அகில இந்திய தலைவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் இரண்டாண்டு ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி இருந்தாலும், நிலுவையில் உள்ள திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com