புதுச்சேரி ரவுடி உடலை ஊருக்குள் கொண்டு செல்லாமல் சுடுகாட்டில் அடக்கம் செய்த போலீசார்

கொலைக்கு உடந்தையாக இருந்த கலைக்குமாரின் நண்பர்களான பொறையூரை சேர்ந்த லோகேஷ் மற்றும் கார்த்தி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி ரவுடி உடலை ஊருக்குள் கொண்டு செல்லாமல் சுடுகாட்டில் அடக்கம் செய்த போலீசார்
Published on: 
Summary

ரவுடி கலைக்குமாரை தேடிவந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கலைக்குமாரின் உறவினர்களுடன் காட்பாடிக்கு சென்ற வில்லியனூர் போலீசார், பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு உடலை புதுச்சேரிக்கு கொண்டுவந்தனர்.

புதுச்சேரி வில்லியனூர் கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 22). தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான கலைக்குமார் என்பவரும் காதலித்து வந்தனர்.

வெட்டிக்கொலை

இதற்கிடையே தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் சிக்கி கலைக்குமார் ஜெயிலில் அடைக்கப்பட்டதால் அவருடன் பேசுவதை ஜெயஸ்ரீ தவிர்த்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கலைக்குமார் ஜெயஸ்ரீயை கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து கடந்த 26-ந்தேதி கலைக்குமார் தனது நண்பர்கள் 2 பேரை அனுப்பி ஜெயஸ்ரீயை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வர செய்தார். அங்கு ஜெயஸ்ரீயை கலைக்குமார் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பின்னர் கலைக்குமாரும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

நண்பர்கள் கைது

இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ரவுடி கலைக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை தேடிவந்தனர். இதில் கொலைக்கு உடந்தையாக இருந்த கலைக்குமாரின் நண்பர்களான பொறையூரை சேர்ந்த லோகேஷ் மற்றும் கார்த்தி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரெயிலில் பாய்ந்து தற்கொலை

தொடர்ந்து ரவுடி கலைக்குமாரை தேடிவந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கலைக்குமாரின் உறவினர்களுடன் காட்பாடிக்கு சென்ற வில்லியனூர் போலீசார், பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு உடலை புதுச்சேரிக்கு கொண்டுவந்தனர். இரவு நேரம் என்பதால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வீட்டிற்கு கொண்டு செல்லாமல், நேரடியாக கோபாலன்கடை சுடுகாட்டிற்கு உடலை கொண்டு சென்றனர்.

சாலை மறியல்

இதுபற்றி தகவல் அறிந்ததும் கலைக்குமாரின் உறவினர்கள் ஆவேசமடைந்து போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோபாலன் கடை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதைதொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கலைக்குமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் சமாதானமடைந்தனர்.

பின்னர் போலீசார் முன்னிலையில் சுடுகாட்டில் கலைக்குமார் உடலுக்கு உறவினர்கள் சார்பில் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com