புதுச்சேரியில் 5-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி புதுச்சேரி அண்ணா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார்.
புதுச்சேரியில் 5-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 5-ந் தேதி மாலை 4 மணிக்கு புதுச்சேரி அண்ணா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.

புதுச்சேரியில் தி.மு.க. பதவி வெறியினால் இந்தியா கூட்டணியை முறையாக அமைக்க முடியவில்லை. 30 தொகுதிகளில் கூட கூட்டணியை அமைக்க முடியாத தி.மு.க. தமிழகத்தில் மிக பெரிய தோல்வியை தழுவும். புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com