

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 17 ஆயிரத்து 672 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துகளைக் குறைக்கவும் போக்குவரத்துக் காவல் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் சிறப்பு வாகன சோதனையில் பல்வேறு வகையான விதி மீறல்கள் கண்டறியப்பட்டன. இதில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 5,594 பேர் மீதும், எதிர்திசையில் வாகனம் ஓட்டிய 2,534 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகனம் ஓட்டும்போது ெசல்போன் பயன்படுத்திய 2,216 பேர், போக்குவரத்து சிக்னலை மீறிய 1,700, சீட் பெல்ட் அணியாமல் சென்ற 1,012 பேர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய 277 பேர், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 186 பேர், சிறார்கள் வாகனம் ஓட்டிய 179 சம்பவங்கள், ஏர் ஹாரன் பயன்படுத்திய 59 நபர்கள், அதிக சுமை ஏற்றிச் சென்ற 13 வாகன ஓட்டுநர்கள் மற்றும் இதர 3,902 போக்கு வரத்து விதிமீறல்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர் ஒருவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளை மீறி நகருக்குள் இயக்கப்பட்ட கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் மீது 6 முதல் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 17 ஆயிரத்து 672 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.