புதுவை சட்டசபை 26-ந்தேதி கூடுகிறது

புதுவை சட்டசபை வருகிற 26-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
புதுவை சட்டசபை 26-ந்தேதி கூடுகிறது
Published on

புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டம் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. 2 நாள் நடந்த இந்த கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். சமீப ஆண்டுக்களாக மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக அரசின் செலவினங்களுக்கு அனுமதி பெறும் வகையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கும் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


இதற்காக வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) புதுவை சட்டசபை கூடுகிறது. அன்றைய தினம் நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து அரசின் கூடுதல் செலவினங்களுக்கு சட்டசபையில் ஒப்புதல் பெறப்படுகிறது. அனேகமாக சட்டசபை ஓரிரு நாள் மட்டுமே நடைபெறும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com