பேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது - மு.க.ஸ்டாலின்

பேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #Anbazhagan #AppolloHospital #MKStalin
பேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் முதுமை காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

நேற்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடுமையான காய்ச்சல் இருந்தது. இதைத் தொடர்ந்து அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது சிறுநீரக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரித்தார்.இன்று மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகன் உடல் நிலை பற்றி விசாரித்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

பொதுச்செயலாளர் பேராசிரியர் நேற்றிரவு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வருவதால் உடல்நலம் தேறி நலமுடன் இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டொரு நாட்களில் உடல்நலம் தேறி இல்லம் திரும்ப இருப்பதால் கழக நிர்வாகிகள்-தோழர்கள் எவரும் நேரில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

தற்போது அன்பழகனின் உடல்நிலை சீராகி வருவதாக டாக்டர்களும் தெரிவித்துள்ளனர். #DMK #Anbazhagan #AppolloHospital #MKStalin

X

Maalai Malar
www.maalaimalar.com