தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் ஓடும் என அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் ஓடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகள்
தனியார் பேருந்துகள்
Published on

சென்னை:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க ஜூன் 30-ந்தேதி வரை 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன் அரசு பேருந்துகள் இயங்கவும் அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் ஓடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களில் தனியார் பேருந்துகள் இயங்கும். குறிப்பிட்ட மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் அரசின் விதிகளை பின்பற்றி 4,400 தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com