ரஷியாவின் அதிபராக நான்காவது முறை தேர்வு - புதினுக்கு தொலைபேசி மூலம் மோடி வாழ்த்து

ரஷிய நாட்டின் அதிபராக நான்காவது முறை தேர்வு செய்யப்பட்டுள்ள விளாடிமிர் புதினுக்கு பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் நல்வாழ்த்துகளை தெரிவித்தார். #pmmodi #PresidentPutin #Presidentialelections
ரஷியாவின் அதிபராக நான்காவது முறை தேர்வு - புதினுக்கு தொலைபேசி மூலம் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி:

ரஷியாவின் அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட விளாடிமிர் புதின்  76.67 சதவீதம் வாக்குகளுடன் அபார வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து, நான்காவது முறை அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்கவுள்ள புதினை இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த புதின் இந்தியா - ரஷியா இடையிலான அனைத்து தரப்பு உறவுகளும் மென்மேலும் மேம்படும் வகையில் பணியாற்றுவோம் என்று உறுதி அளித்தார்.

இதேபோல், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் புதினுக்கு தங்களது நல்வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். #tamilnews #pmmodi #PresidentPutin #Presidentialelections

X

Maalai Malar
www.maalaimalar.com