பெட்ரோல் விலை ரூ.2.16, டீசல் ரூ.2.10 காசுகள் குறைப்பு : நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 16 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் விலை ரூ.2.16, டீசல் ரூ.2.10 காசுகள் குறைப்பு : நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
Published on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 16 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.17-க்கும், டீசல் ரூ.60.71-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பைத் தொடர்ந்து நள்ளிரவு முதல் பெட்ரோல் ரூ.69.01-க்கும், டீசல் 58.61-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com