

பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ் மலை பகுதியான ஆடலூர், பன்றிமலை, பள்ளத்துக்கால்வாய், கே.சி.பட்டி, தாண்டிக்குடி, சேம்படி, ஊத்து, பாச்சலூர், தடியன்குடிசை, பெரும்பாறை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான விவசாயிகள் காப்பி, சவ்சவ், பீன்ஸ் ஆகியவை சாகுபடி செய்து உள்ளனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக யானைகள் அந்த பகுதியில் முகாமிட்டு விளைநிலங்களை நாசம் செய்து வருகிறது. அதோடு அங்கு பணியாற்றும் தொழிலாளர்களையும் யானை தாக்குகிறது. இதனால் விவசாய தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
அதனை தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
உதாரணமாக நேற்று இரவு 3 யானைகள் பெருங்கானல் பகுதியில் முகாமிட்டு இருந்தது. இந்த யானைகள் அங்கு உள்ள விவசாய பயிர்களை நாசம் செய்தது. அதோடு அங்கு உள்ள ஒரு வீட்டையும் இடித்து தள்ளியது.
இன்று காலை தோட்டத்துக்கு வந்த விவசாயிகள் பயிர்களை யானைகள் நாசம் செய்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு அவர்க தகவல் கொடுத்து உள்ளனர். அவர்கள் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.