டெல்லி காங்கிரஸ் கமிட்டியை கலைத்த ஷீலா தீட்சித் முடிவு நிராகரிப்பு

டெல்லியில் உள்ள 280 வட்டங்களில் இயங்கிவந்த காங்கிரஸ் கமிட்டிகள் கலைக்கப்பட்டதாக அக்கட்சியின் டெல்லி தலைவர் ஷீலா தீட்சித் நேற்று வெளியிட்ட அறிவிப்பு நிராகரிக்கப்பட்டது.
ஷீலா தீட்சித்
ஷீலா தீட்சித்
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பாராத விதமாக பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில் சில மாநிலங்களில் தலைவர்களை மாற்றும் நடவடிக்கையை டெல்லி தலைமை எடுத்து வருகிறது.

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சமீபத்தில் கலைக்கப்பட்டன. 

இந்நிலையில், டெல்லியில் உள்ள 280 வட்டங்களில் இயங்கிவந்த காங்கிரஸ் கமிட்டிகள் கலைக்கப்பட்டதாக அக்கட்சியின் டெல்லி தலைவரும் டெல்லி முன்னாள் முதல் மந்திரியுமான ஷீலா தீட்சித் நேற்று அறிவித்தார்.

ஆனால், அவரது முடிவை டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளரான பி.சி.சாக்கோ நிராகரித்து விட்டதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான உத்தரவை காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஷீலா தீட்சித்துக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

டெல்லி காங்கிரசில் தனக்கு எதிராக செயல்பட்ட கோஷ்டிகளை ஓரம்கட்டிய பின்னர், வேண்டிய நபர்களை பதவிகளில் நியமித்து விரைவில் நடைபெறவுள்ள டெல்லி சட்டசபை தேர்தலை சந்திக்க ஷீலா தீட்சித் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com