

சண்டிகர்:
பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் அம்ரிஸ்டர் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதிக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கையை பற்றி குறிப்பிட முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ’அதைப்பற்றி நான் உறுதியாக எதுவும் கூற முடியாது. கொல்லப்பட்டவர்கள் ஒருவராக இருக்கலாம், அல்லது 100 பேராகவும் இருக்கலாம்.
ஆனால், இந்திய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி கொன்றால் தகுந்த பதிலடி தரப்படும் என்ற செய்தியை இந்த தாக்குதலின் மூலம் இந்தியா உரக்கவும் தெளிவாகவும் பாகிஸ்தானுக்கு தெரிவித்திருக்கிறது.
தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடுகளிடம் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது. அதனால், இந்தியாவுக்கு எதிராக போர்நடத்த பாகிஸ்தான் முன்வராது.
அப்படி ஒருநிலை ஏற்பட்டு நமக்கு எதிரான மரபுசார்ந்த போர் முறைகளில் வெற்றிபெற முடியாமல் போனால், இந்தியா மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த பாகிஸ்தான் தயங்காது’ என குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில முதல் மந்திரியாக தற்போது பதவிவகிக்கும் அமரிந்தர் சிங் இந்திய ராணுவத்தில் முன்னர் கேப்டன் ஆக பணியாற்றியவர் என்பது நினைவிருக்கலாம். #Pakistanusenuke #usenuke #defeatagainstIndia #AmarinderSingh