

பெர்ன்:
211 நாடுகள் அடங்கிய சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் அணி 200-வது இடத்தில் உள்ளது. 2015-ம் ஆண்டு ஏமன் அணிக்கு எதிராக விளையாடிய அந்த அணி அதன் பின்னர் சர்வதேச போட்டிகள் எதுவும் ஆடாமல் உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் கால்பந்து சங்கத்தை சஸ்பெண்டு செய்வதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அறிவித்துள்ளது. இந்த தடையானது பாகிஸ்தான் அணி மற்றும் பாகிஸ்தான் கால்பந்து சங்கத்துக்கு பிபா வழங்கும் அனைத்து உதவிகள் என எல்லாவற்றுக்கும் பொறுந்தும் என பிபா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கால்பந்து சங்கத்தின் அனைத்து சொத்துக்கள் மற்றும் வங்கிகணக்குகள் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நிர்வாகங்களை பிபா சட்ட அனுமதி இல்லாமல் மூன்றாம் நபர் அனுக முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பாக உடனடியாக கருத்துக்களை கூற முடியாது என பாகிஸ்தான் கால்பந்து சங்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.