ஜூன் 3-ந் தேதி பிறந்தநாளில் கருணாநிதியை நிர்வாகிகள் சந்திக்க ஏற்பாடு

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ஜூன் 3-ந் தேதி 94 வயது பிறக்கிறது. அன்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஜூன் 3-ந் தேதி பிறந்தநாளில் கருணாநிதியை நிர்வாகிகள் சந்திக்க ஏற்பாடு
Published on

சென்னை:

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ஜூன் 3-ந் தேதி 94 வயது பிறக்கிறது. கடந்த வருடம் அவர் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு சென்று தொண்டர்களை சந்தித்தார்.

அதன்பிறகு டிசம்பர் மாதம் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. வயோதிகம் காரணமாக தற்போது அவர் கோபாலபுரம் வீட்டில் முழு ஓய்வு எடுத்து வருகிறார்.

வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அவரை பார்த்துக்கொள்கிறார்கள். அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் கருணாநிதி தினமும் தொலைக் காட்சி செய்திகளையும் தவறாமல் பார்த்து வருகிறார்.

அவரது உடல் நிலை கடந்த மாதத்தை விட இப்போது ஓரளவு தேறி உள்ளது. அவரை சந்திக்க வருபவர்களை பார்த்து சிரிக்கிறார். ஓரிரு வார்த்தை சொல்ல முயற்சிக்கிறார். தொண்டையில் டியூப் பொருத்தப்பட்டிருப்பதால் முழுமையாக பேச முடியவில்லை. இன்னும் ஓரிரு நாளில் ‘டியூப்’ அகற்றப்பட்டு விடும்.

அதன் பிறகு அவர் முழுமையாக பேசுவதற்கு பேச்சுபயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஜூன் -3 ந்தேதி பிறந்த நாளன்று அவர் முழுமையாக பேசும் அளவுக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்படும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி முழுமையாக பேசினால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை ஜூன் 3-ந் தேதி சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com