சட்டசபையில் என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம்: ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சட்டசபையில் பேசும் உறுப்பினர்கள் யாரும் என்னை புகழ்ந்து பேச வேண்டாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சட்டசபையில் என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம்: ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
Published on

சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் தொடங்கியதும் கலசப்பாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம், கலசப்பாக்கம் தொகுதியில் வனவியல் கல்லூரி அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை அவர் தொடங்கும் போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி புகழ்ந்து பேசினார். பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு தொடர்பாக புகழ்ந்து பேசினார்.

அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் சல சலப்பு ஏற்பட்டது.

பின்னர் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “இந்த சபையில் பேசும் உறுப்பினர்கள் யாரும் என்னை புகழ்ந்து பேச வேண்டாம். இந்த புகழ் அனைத்தும் இதயதெய்வம் அம்மாவுக்கு சொந்தமானது” என்றார். அதன் பிறகு பேசிய அ.தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை புகழ்ந்து பேசவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com