இன்னும் சில நாட்களில் வெங்காயம் விலை குறையும் - மத்திய மந்திரி அறிவிப்பு

நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் வெங்காயம் விலை குறையும் என மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.
வெங்காயம்
வெங்காயம்
Published on

புதுடெல்லி:

நாடு முழுவதும் வெங்காயம் விலை கிலோ ரூ.80 அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேளாண் பொருட்களுக்கு பொதுமக்கள் அதிக விலை கொடுக்கும்போது, விவசாயிகளுக்கு குறைவான தொகையே கிடைக்கிறது. இருதரப்பும் பாதிப்பு அடையாத வகையில் செயல்படுவதுதான் எங்கள் வேலை.வெங்காயம் விலை நிலவரத்தை நாங்கள் அறிவோம். அதுதொடர்பாக எண்ணற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசிடம் ஏராளமான வெங்காயம் இருப்பில் உள்ளது. அதில் இருந்து மாநிலங்களுக்கு வெங்காயம் குறைந்த விலையில் விடுவிக்கப்பட்டு வருகிறது. இதனால், வரத்து அதிகரிப்பதால், இன்னும் சில நாட்களில் விலை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com