உக்ரைன்: குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் பலி - எம்.பி. உட்பட 3 பேர் காயம்

உக்ரைன் தலைநகர் கீவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியானார். மேலும் ஒரு எம்.பி. உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
உக்ரைன்: குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் பலி - எம்.பி. உட்பட 3 பேர் காயம்
Published on

கீவ்:

உக்ரைன் தலைநகர் கீவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியானார். மேலும் ஒரு எம்.பி. உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் நேற்றிரவு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கக்கூடும் எனவும், காயமடைந்த மூன்று பேரில் ஒருவர்  அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் இஹோர் மோசிசக் எனவும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com