மேலும் 1 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன- கொரோனா பரிசோதனை தீவிரம்

கொரோனா பரிசோதனையை மேலும் விரிவுபடுத்துவதற்காக தமிழகத்திற்கு 1 லட்சம் பிசிஆர் சோதனைக் கருவிகள் வந்தடைந்துள்ளன.
பிசிஆர் சோதனை
பிசிஆர் சோதனை
Published on

சென்னை:

தமிழகத்தில் பிசிஆர் சோதனைக் கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனையை மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கையிருப்பில் உள்ள 1.20 லட்சம் பிசிஆர் சோதனைக் கருவிகளைக் கொண்டு இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 416 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கூடுதல் மாதிரிகளை பரிசோதனை செய்ய ஏதுவாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் இன்று தமிழகம் வந்தடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த கருவிகள் ஆய்வகங்களில் இருந்து அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் பிரித்து அனுப்பப்படும் என்றும், அதன் பிறகு 2.20 லட்சம் கருவிகளைக் கொண்டு தொடர் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், மேலும் 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க  தென்கொரியாவிடம் ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com