பயணியை கல்வீசி தாக்கியதாக ஆம்னி பஸ் ஊழியர்கள் மீது புகார்

மதுரை அருகே பயணியை கல்வீசி தாக்கியதாக ஆம்னி பஸ் ஊழியர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on: 

மதுரை:

மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்திற்கு நேற்று இரவு சென்னை பம்மலைச் சேர்ந்த சதாம் உசேன் (வயது 29) வந்தார். அவர் சென்னை செல்ல பஸ் குறித்து விசாரித்தபோது, தனியார் ஆம்னி பஸ் ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஊழியர்கள் ராஜபாண்டி, அன்சாரி, சேது, இப்ராகிம்ஷா ஆகியோர் தன்னை தாக்கிய தோடு, கற்களையும் வீசியதாக அண்ணாநகர் போலீசில் சதாம் உசேன் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி ராஜபாண்டி உள்பட 4 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com