வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு ஒடிசா முதல் மந்திரி பாராட்டு: வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கினார்

உலக ஹாக்கி லீக் பைனலில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்தியா வெற்றி பெற்று வெண்கலம் வென்றதற்கு ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்ததுடன், வீரர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கினார்.
வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு ஒடிசா முதல் மந்திரி பாராட்டு: வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கினார்
Published on

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் உலக ஹாக்கி லீக் பைனலில் மூன்றாவது இடத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.

உலக ஹாக்கி லீக் பைனலில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்ற இந்தியாவுக்கு ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்தார்.

அத்துடன், இந்திய ஹாக்கி அணியில் உள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com