அடுத்த தலைவர் கனவு எனக்கு இல்லை - ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பேட்டி

அடுத்த தலைவர் பற்றியெல்லாம் என்றைக்குமே நான் கனவு கண்டதில்லை என ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்.
ரவீந்திரநாத் குமார்
ரவீந்திரநாத் குமார்
Published on

சென்னை:

மதுரை விமான நிலையத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. ஓ.ப.ரவீந்திரநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன்விவரம் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க. அடுத்த தலைவராகும் எண்ணம் உங்களுக்கு உண்டா?

பதில்:- பாராளுமன்றத்துக்கு நான் தேனி தொகுதி உறுப்பினராக சென்றிருக்கிறேன். அடுத்து என்னுடைய செயல்பாடு என்ன வென்றால் பிரசாரத்தின்போது சொன்னதுபடி தேனி பாராளுமன்ற தொகுதியை தமிழகத்தின் முதன்மை தொகுதியாக கொண்டு வருவேன்.

அதற்கு மேலாக நீங்கள் கேட்டதுபோல் அடுத்த தலைவர் பற்றியெல்லாம் என்றைக்குமே நான் கனவு கண்டதில்லை. என்னுடைய செயல்பாட்டை நான் சிறப்பாக செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com