இந்தியாவில் நோக்கியா 8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சர்வதேச சந்தையை தொடர்ந்து இந்தியாவில் நோக்கியா 8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நோக்கியா 8 சிறப்பம்சங்கள் மற்றும் இந்திய விலை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் நோக்கியா 8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் 5.3 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

இந்தியாவில் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம், ஓரியோ அப்டேட் மற்றும் 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா கொண்டுள்ளது. மேலும் குறைந்த வெளிச்சத்திலும் தலைச்சிறந்த புகைப்படங்களை எடுக்கும் வசதியை கொண்டுள்ளது.    

புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் டூயல்-சைட் வீடியோ அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா மூலம் சமூக வலைத்தளங்களில் நேரலை வீடியோக்களை ஒரே சமயத்தில் பதிவு செய்ய முடியும். இத்துடன் ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம் வழங்கப்பட்டுள்ளதோடு புதிய நோக்கியா 8 ஸ்மார்ட்போன் கேமராக்களில் செய்ஸ் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 8 சிறப்பம்சங்கள்:

- 5.3 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் HD LCD டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 13 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா
- 13 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3090 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0

அலுமினியம் யுனிபாடி வடிவமைப்பு கொண்ட நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக நோக்கியா OZO ஸ்பேஷியல் 360-டிகிரி ஆடியோ போனில் உள்ள மூன்று மைக்ரோபோன்களை பயன்படுத்தி துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com