கொரோனாவால் சட்டசபை கூட்டத்தொடரை ஒத்திவைக்க அவசியமில்லை- எடப்பாடி பழனிசாமி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டசபை கூட்டத்தொடரை ஒத்திவைக்க அவசியமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தமிழக சட்டசபை கூட்டத் தொடரை ஒத்திவைக்கும்படி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா காரணமாக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்றார். 

சட்டசபையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், தான் உள்பட உறுப்பினர்கள் அனைவரும் பரிசோதனைக்கு பிறகே சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com