இலங்கையுடனான 2வது டெஸ்ட் - வெற்றியின் விளிம்பில் நியூசிலாந்து

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 4 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. #NZvSL
இலங்கையுடனான 2வது டெஸ்ட் - வெற்றியின் விளிம்பில் நியூசிலாந்து
Published on

நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 178 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 104 ரன்களில் சுருண்டது. போல்ட் 15 பந்துகளில் 6 விக்கெட்டை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

74 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து, 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டாம் லாதம் 176 ரன்னில் அவுட்டானார். நிக்கோல்ஸ் 162 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, இலங்கை அணிக்கு 660 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 3-வதுநாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தினேஷ் சண்டிமால், குசால் மெண்டிஸ் ஆகியோர் அரை சதமடித்தனர். இருவரும் சேர்ந்து 117 ரன்கள் சேர்த்தனர். சண்டிமால் 56 ரன்னிலும், மெண்டிஸ் 67 ரன்னிலும் அவுட்டாகினர். 

அடுத்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 22 ரன்னில் காயமடைந்து வெளியேறினார். அதன்பின், ரோஷன் சில்வா 18 ரன்னிலும், நிரோஷன் டிக்வெலா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

4வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. தில்ருவான் பெராரா 22 ரன்னும், சுரங்க லக்மால் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

இன்னும் ஒருநாள் மீதமிருக்கும் நிலையில், 4 விக்கெட்டுகளை எடுப்பதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றியை நெருங்கியுள்ளது. #NZvSL

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com