நீட் தேர்வு முடிவு 20-ந்தேதி வெளியாகிறது: இன்று விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சி.பி.எஸ்.சி. தயாராகி வரும் நிலையில் இன்று, தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவு வரும் 20-ந்தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வு முடிவு 20-ந்தேதி வெளியாகிறது: இன்று விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது
Published on

புதுடெல்லி:

மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தகுதி காண் நுழைவுத் தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன் பேரில் நாடு முழுவதும் கடந்த மாதம் 7-ந்தேதி தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட 8 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது.

பிராந்திய மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் மாறுபாடு இருந்ததால் நீட் தேர்வில் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து நீட் தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்தது. அந்த தடையை கடந்த திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து அறிவித்தது.

இதையடுத்து நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சி.பி.எஸ்.சி. தயாராகி வருகிறது. முதல் கட்டமாக நேற்று முன்தினம் விடைத்தாள் நகல் சி.பி.எஸ்.இ. இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று, தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனேகமாக வரும் 20-ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக மத்திய கல்வி வாரிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com