

சென்னை:
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்விற்கு விலக்குக்கோரி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாளை (13-ந்தேதி) தமிழகம் தழுவிய மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நாளை காலை 9 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நாராயணப்பா தெருவில் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி (திராவிடர் கழகம்), குமரிஅனந்தன் (காங்கிரஸ்), தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு), தொல். திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.செய்தி தொடர்பாளர்), ப.செல்வசிங் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), சுப.வீர பாண்டியன் (திராவிடர் இயக்க தமிழர் பேரவை), கே.எ.எம்.முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) கலந்து கொள் கிறார்கள்.
அவ்வாறு அவர் கூறியுள்ளார்.