பட்டப்பகலில் தொழிலதிபர் சுட்டுக் கொலை.. ஜார்க்கண்டில் துணிகரம்

தலை மற்றும் உடலில் 4 தோட்டாக்கள் பாய்ந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.
தொழிலதிபர்
தொழிலதிபர்
Published on

ஜார்க்கண்டில் நடுரோட்டில் தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரம் அரங்கேறியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேலா கர்சவான் மாவட்டத்தில் சண்டில் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த கொலை நேற்று பிற்பகலில் அரங்கேறியுள்ளது.

தாக்குதல்

ஜாம்சத்பூரை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் ஹோட்டல் உரிமையாளருமான நிகர் சப்லோக் (33) நெற்று பிற்பகல் 3:00 முதல் 3:30 மணியளவில் அவ்வழியே சொந்த வெளியாக வாகனத்தில் சென்றுகொண்டிருந்ததார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தலை மற்றும் உடலில் 4 தோட்டாக்கள் பாய்ந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

விசாரணை

சம்பவ இடத்திலிருந்து சுடப்பட்ட 8 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.

கொலைக்கான காரணம் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதமா, தனிப்பட்ட பகையா அல்லது ரவுடி கும்பல்களின் பணப் பறிப்பு முயற்சியா என்ற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. சில சந்தேக நபர்களையும் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த ஜனவரி 13 அன்று இதே பகுதியிலிருந்து தேவாங் காந்தி என்ற தொழிலதிபரின் மகன் கைரவ் காந்தி கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

தற்போது தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஜாம்ஷெட்பூர் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com