அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் மகளின் கண் முன்னே சுட்டுக் கொலை

சுரேஷ் படேல் சமீபத்தில்தான் அந்தக் கடையை வாங்கியிருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலை
கொலை
Published on

அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் மகளின் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த சுரேஷ் படேல் (56), அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் ஜாக்சன் நகரில் ரிட்ஜ்கிரெஸ்ட் செல்லர்ஸ் என்ற மதுபான கடையை நடத்தி வந்துள்ளார்.

கொள்ளை

ஜாக்சன் காவல்துறையின் தகவல்படி, கடந்த விளையாழக்கிமை இரவு அவர் தனது 19 வயது மகளுடன் இருந்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர் கடைக்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

பணத்தைப் பெற்ற பிறகு, அந்த நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் படேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவத்தின் போது அருகிலிருந்த சுரேஷ் படேலின் 19 வயது மகள் காயமின்றி தப்பினார்.

அதே கடையில் பணியாற்றிய 70 வயது ஊழியர் ஒருவர் கீழே விழுந்ததில் கை மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது.

சுரேஷ் படேல் சமீபத்தில்தான் அந்தக் கடையை வாங்கியிருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

தேடுதல் வேட்டை

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அந்த சந்தேக நபர் சாம்பல் நிற ஹூடி மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குப் பிறகு அந்த சந்தேக நபர் ஒரு வெள்ளை நிற காரில் தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜாக்சன் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், குற்றவாளியைத் தேடும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் தொடரும் தாக்குதல்கள்

அமெரிக்காவில் வணிக நிறுவனங்கள் நடத்தி வரும் இந்தியர்கள் குறிவைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் வர்ஜீனியாவின் நார்போக் நகரில் மேக்னா படேல் என்ற பெண் தனது கடைக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த ஆண்டு மே 2025 இல் டென்னசியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பிரின்ஸ் படேல் என்பவர் கொள்ளையனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com