அமித் ஷாவின் மூத்த சகோதரி காலமானார்

குஜராத்தின் காந்தி நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட்வர் அமித் ஷா பல முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்தார், அமித் ஷா
அமித் ஷாவின் மூத்த சகோதரி காலமானார்
Published on

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநில தலைநகர் காந்தி நகர் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காந்தி நகர் சென்ற அமித் ஷா, அம்மாநில பா.ஜ.க. தொண்டர்களுடன் "மகர சங்கராந்தி" பண்டிகையை கொண்டாடி வந்தார். மேலும் பல முக்கிய நிகழ்ச்சிகளில் அங்கு கலந்து கொள்ள இருந்தார்.

இந்நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமித் ஷாவின் மூத்த சகோதரி ராஜேஸ்வரி பென் ஷா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்செய்தியை தொடர்ந்து, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்த அமித் ஷா, மும்பை சென்றார்.

சுமார் 60 வயதான ராஜேஸ்வரி பென் ஷா, கடந்த சில நாட்களாக உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி சடங்கு தல்தேஜ் மயானத்தில் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com