நாடாளுமன்ற செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்!

1947-ல் வழங்கப்பட்ட செங்கோல், 2023 மே 28 அன்று பிரதமர் மோடியால் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்!
Published on: 

இந்திய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை வடிவமைத்ததில் முக்கிப் பங்காற்றிய உம்மிடி எத்திராஜ் இன்று சென்னையில் காலமானார்.

1926-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி பிறந்த அவர், அடுத்த மாதம் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாட இருந்தநிலையில் காலமானார்.

125 ஆண்டுகள் பழமையான உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

இரங்கல்

இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

செங்கோல் வடிவமைப்பு

1947-ல் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 'செங்கோல்' வடிவமைப்பில் முக்கியப் பங்கு வகித்தவர்.

1947-ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திர இந்தியாவிற்கு அதிகாரம் கைமாறியதைக் குறிக்கும் சின்னமான செங்கோல் வடிவமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் திருவாடுதுறை ஆதின மடத்தால் வழங்கப்பட்ட இந்த செங்கோல், 2023 மே 28 அன்று பிரதமர் மோடியால் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com