search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மும்பை திரும்பி வந்து என்னுடன் பேசுங்கள்: அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு
    X

    மும்பை திரும்பி வந்து என்னுடன் பேசுங்கள்: அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு

    • நீங்கள் திரும்பி வந்து, என்னை நேருக்கு நேராக சந்தித்தால் வழிபிறக்கும்.
    • உங்கள் மனதளவில் நீங்கள் இன்னும் சிவசேனாவில் தான் உள்ளீர்கள்.

    மும்பை :

    சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளதால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. இதில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

    அதே நேரத்தில் சட்டசபையில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மும்பை திரும்புமாறு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

    இது குறித்து அவர் பேசியதாவது:- இப்போதும் ஒன்றுமில்லை. நீங்கள் திரும்பி வந்து என்னுடன் உட்காருங்கள். பொதுமக்கள், சிவசேனா தொண்டர்களிடம் நிலவும் குழப்பத்தை போக்குங்கள். நீங்கள் திரும்பி வந்து, என்னை நேருக்கு நேராக சந்தித்தால் வழிபிறக்கும்.

    கட்சியின் தலைவராகவும், குடும்ப தலைவனாகவும் உங்கள் மீது இன்னும் எனக்கு அக்கறை உள்ளது. நீங்கள் கடந்த சில நாட்களாக கவுகாத்தியில் சிக்கி உள்ளீர்கள். ஒவ்வொரு நாளும் புதிய செய்தி வருகிறது. உங்களில் பலர் தொடர்பில் இருக்கிறீர்கள். உங்கள் மனதளவில் நீங்கள் இன்னும் சிவசேனாவில் தான் உள்ளீர்கள். உங்களின் குடும்பத்தினரும் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×