மணிப்பூரில் நாகா சமூகத்தினர் 2 பேர் வீடு புகுந்து சுட்டுக் கொலை

வீட்டில் இருந்த 4 பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.
மணிப்பூர்
மணிப்பூர்
Published on: 
Summary

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நாகா இனத்தவர் இருவர் கொல்லப்பட்டனர்.

மணிப்பூரில் சேனாபதி மாவட்டத்தில் காலென்ஜாங் கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராக்கி மற்றும் குமார் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

அது கிராம தலைவரின் வீடு என கூறப்படுகிறது. அந்த கும்பல், வீட்டில் இருந்த 4 பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.

இதில் ராக்கி மற்றும் குமார் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். அடானி மானியோ (வயது 33), ஆஷிஹோ சானி (வயது 49) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் நடந்த உடனே போலீசார் அங்கு விரைந்தனர். தாக்குதல் குறித்த மேலதிக தகவல் இன்னும் வெளியாகவில்லை. தாக்குதலை நடத்தியவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

பாஜகவை சேர்ந்த மணிப்பூர் முன்னாள் முதல்வர் என். பைரன் சிங் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மட்டும் மணிப்பூரில் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தொடரும் வன்முறை

கடந்த 3 நாட்களில் நடந்த 2வது சம்பவம் இதுவாகும். நேற்று முன்தினம் அதிகாலையில் இந்தோ-மியான்மர் எல்லை பகுதியில் மணிப்பூரின் காம்ஜோங் மாவட்டத்தில் பிலாங் கிராமத்தில் அண்டை நாடான மியான்மரை சேர்ந்த கிளர்ச்சி குழுவினர் திடீரென ஆயுதங்களுடன் புகுந்தனர்.

அவர்கள் கிராமவாசிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்ச்சியாக, நாகா மக்கள் 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com