இது எமர்ஜென்சியை விட மோசமான காலம் - அரவிந்த் கெஜ்ரிவால்

தேர்தல் முறைகேடு ,வாக்குத் திருட்டு மூலமாகவே தான் வெற்றி பெற்றோம் என்பது பிரதமர் மோடிக்குத் தெளிவாகத் தெரியும்.
 Arvind Kejriwal
Published on: 

சிஜேபி நிறுவனர்அபிஜித் தீப்கே, டெல்லி விமான நிலையத்தில் வைத்து விமானத்திற்குள்ளேயே டெல்லி போலீசாரால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டார்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி கட்சி சார்பில் திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அபிஜித் தீப்கேவுடன் சேர்த்து அக்கட்சியைச் சேர்ந்த சௌரவ் தாஸ் ஆகியோரும் தடுப்பு காவலில் எடுக்கப்பட்டனர்.

அபிஜித் தீப்கேவின் இந்த கைது நடவடிக்கைக்கு டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பாளர்களை கைது செய்வது முன்னெப்போதும் இல்லாத அளவிலான அச்சத்தை தருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

இது அவசரநிலைக் காலத்தை விட மோசமானது

இது அதிகாரப்பூர்வமாகிவிட்டது மோடியின் முழுமையான சர்வாதிகார ஆட்சியின் கீழ் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விமானத்திலிருந்து இறங்கிய உடனேயே 'கரப்பான் பூச்சிகளை' (எதிர்ப்பாளர்களை) கைது செய்வது, முன்னெப்போதும் இல்லாத அளவிலான அச்சத்தையே வெளிப்படுத்துகிறது.

தேர்தல் முறைகேடு, வாக்குத் திருட்டு மூலமாகவே தான் வெற்றி பெற்றோம் என்பது பிரதமர் மோடிக்குத் தெளிவாகத் தெரியும்; இப்போது ஜனநாயகத்தை முற்றிலுமாக நசுக்கி, தனது அந்த மோசடியைப் பாதுகாப்பதிலேயே அவர் தீவிரமாக முனைப்புடன் இருக்கிறார்.ஞானேஷ் பதவி விலக வேண்டும்; ஆனால், மோடியும் பதவி விலக வேண்டும்.

என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com