ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பது அரசியலமைப்புக்கு எதிரான ஒரு வழிபாட்டு குழு: ராகுல் காந்தி

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த பல பெண்கள் தன் பக்கம் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi accuses RSS
Published on: 
Summary

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பெண்களை ஆண்களுக்கு கீழானவர்களாக நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் முழுக்க முழுக்க ஆண்களை கொண்ட அரசியலைமைப்புக்கு எதிரான ஒரு வழிபாட்டு குழு என்றும், அந்த அமைப்பு பெண்களை ஆண்களுக்கு கீழானவர்களாக நடத்துவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எக்ஸ் பதிவு

இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆர்.எஸ்.எஸ் என்பது, பெண்கள் ஆண்களின் சொத்து என்று நம்பும்.

அது முழுக்க முழுக்க ஆண்களை கொண்ட ஒரு அரசியலமைப்புக்கு எதிரான வழிபாட்டுக் குழு. நான் சிவசக்தியை நம்புகிறேன்; அதனால்தான் அவர்களை எதிர்த்து போராடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

இதில் அழகான விஷயம் என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த பல பெண்கள் என் பக்கம் இருக்கிறார்கள்,” என்று கூறினார்.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து ராகுல் காந்தி பதிவிட்டுள்ள கருத்துக்கு, மகாராஷ்டிர பாஜக எம்.எல்.ஏ. ராம் கடம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறுபிள்ளைத்தனமான கருத்துகள்

இதுகுறித்து அவர் கூறுகையில், “ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ். பற்றி அடிக்கடி கருத்துகளைத் தெரிவிக்கிறார்.

அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள், எதிர் குற்றச்சாட்டுகள் மற்றும் கடுமையான விமர்சனங்களில் ஈடுபடுவதற்கு அவருக்கு நிச்சயமாக உரிமை இருந்தாலும், அவர் அதை முறையான ஆய்வுக்கு பிறகே செய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பெண்களுக்கும் ஒரு பிரிவு உள்ளது என்பது அவருக்குத் தெரியாதா? அது நாடு முழுவதும் செயல்படுகிறது, மேலும் அதில் பெண்கள் ஆண்களுக்கு இணையான முக்கியத்துவத்துடன் பணியாற்றுகிறார்கள்.

மேலும் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான கருத்துக்கள் ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கு பொருந்தாது” என்று கூறினார்.

33% பெண்கள் இட ஒதுக்கீட்டை ஏன் ஆதரிக்கவில்லை?

தெலங்கானா பாஜக தலைவர் என். ராம்சந்தர் ராவ் கூறுகையில், “தன் கட்சியில் ஆண்களின் ஆதிக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை ராகுல் காந்தி மறந்துவிடுவதாக தெரிகிறது.

அவர்கள் எங்கு ஆட்சி செய்தாலும், அங்கு எத்தனை பெண் முதலமைச்சர்கள் உள்ளனர் என்பதற்கு அவர் பதிலளிக்கட்டும். தலைநகரில் பாஜகவுக்கு ஒரு பெண் முதலமைச்சர் இருக்கிறார்.

நீங்கள் பெண்களுக்கு எதிரானவர் இல்லை என்றால், தொகுதி வரையறையுடன் கூடிய 33% பெண்கள் இட ஒதுக்கீட்டை ஏன் ஆதரிக்கவில்லை?.

இது காங்கிரஸ் கட்சியின் பாசாங்குத்தனமான நிலைப்பாடு” என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com