குஜராத் கடல் பகுதி அருகே ரூ.280 கோடி ஹெராயின்-படகுடன் 9 பாகிஸ்தானியர் கைது

சிறை பிடிக்கப்பட்ட பாகிஸ்தான் படகில் ரூ.280 கோடி மதிப்புள்ள ஹெராயின் இருந்தது. அந்த படகில் 9 ஊழியர்கள் இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

அகமதாபாத்:

குஜராத் அருகே உள்ள இந்திய கடல் பகுதியில் பாகிஸ்தான் படகு ஒன்று அத்துமீறி நுழைந்தது.

அரபி கடலின் எல்லையில் நுழைந்த அந்த படகை இந்திய கடலோர காவல் படையும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் பிடித்தனர்.

சிறை பிடிக்கப்பட்ட பாகிஸ்தான் படகில் ரூ.280 கோடி மதிப்புள்ள ஹெராயின் இருந்தது. அந்த படகில் 9 ஊழியர்கள் இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ரூ.280 கோடி போதை பொருள் மற்றும் படகு பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 9 பாகிஸ்தானியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்களிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜகாவு துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com