தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்வு- ஒரே நாளில் 11,109 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 49,622 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 4,624 அதிகமாகும்.
தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்வு- ஒரே நாளில் 11,109 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 10 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 10,158 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.

இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 3,089 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லியில், 1,527, மகாராஷ்டிராவில் 1,086, அரியானாவில் 855, தமிழ்நாட்டில் 469, இமாச்சலபிரதேசத்தில் 440, உத்தரபிரதேசத்தில் 549, குஜராத்தில் 417, கர்நாடகாவில் 498, ராஜஸ்தானில் 293, சத்தீஸ்கரில் 370, ஒடிசாவில் 258, பஞ்சாப்பில் 322, ஜம்முகாஷ்மீரில் 151, புதுச்சேரியில் 104, உத்தரகாண்டில் 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 97 ஆயிரத்து 269 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி 49,622 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 4,624 அதிகமாகும்.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 6,456 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 16 ஆயிரத்து 583 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் டெல்லி, ராஜஸ்தானில் தலா 3 பேர், சத்தீஸ்கர், பஞ்சாப்பில் தலா 2 பேர் உள்பட 20 பேர் நேற்று இறந்துள்ளனர்.

கேரளாவில் விடுபட்ட 9 இறப்புகளை கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 64 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com