டெல்லியில் சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: 20 ஆயிரம் போலீசார் குவிப்பு

பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்கள் மற்றும் அதிக நடமாட்டம் கொண்ட பகுதிகளில் வான்வழி கண்காணிப்பை மேற்கொள்ள போலீசார் டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
டெல்லியில் சுதந்திர தினவிழா ஒத்திகையில் ‘வந்தே மாதரம்’ எழுத்துக்கள் தெரியும் வகையில் மாணவர்கள் அமர்ந்திருந்த காட்சி.
டெல்லியில் சுதந்திர தினவிழா ஒத்திகையில் ‘வந்தே மாதரம்’ எழுத்துக்கள் தெரியும் வகையில் மாணவர்கள் அமர்ந்திருந்த காட்சி.
Published on

சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்க, டெல்லி போலீசார் ரோந்து பணிகள், வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

80-வது சுதந்திர தின விழா

80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை மறுநாள் (15-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மேலும் “வந்தே மாதரம்” பாடலின் 150-வது ஆண்டை கொண்டாடும் வகையில் முதல்முறையாக சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. டெல்லி நகரம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்க, டெல்லி போலீசார் ரோந்து பணிகள், வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் கூடுதல் சோதனைச்சாவடிகள் மற்றும் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்ற பின்னணி கொண்டவர்கள் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பை உறுதி செய்வதிலும் போலீசார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

சுதந்திர தின விழாவையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து நிலையில் உள்ள போலீஸ் அதிகாரிகளும் களத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு டெல்லியின் பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் வாகனங்களை கண்டறிய சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழா நடைபெறும் பகுதியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெண் போலீசார் உட்பட 1,600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எல்லை பகுதிகள், முக்கிய சந்திப்புகள் மற்றும் பிற இடங்களில் சுமார் 60 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சோதனை

முக்கிய சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து போலீசார், ரோந்து போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து ஒருங்கிணைந்த சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் வாகனங்களை சோதனை செய்வதோடு, வாகன நிறுத்தும் இடங்களிலும் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

குற்ற பின்னணி கொண்டவர்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அவர்களை கண்காணித்து வருகிறோம். அதேபோல் ஏராளமான வாகனங்களையும் வாகன நிறுத்தும் இடங்களையும் ஆய்வு செய்கிறோம்.

மூத்த போலீஸ் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ஆய்வு மேற்கொள்கிறார்கள். போலீஸ் நிலையங்களில் உள்ள பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து மற்றும் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். சோதனைச் சாவடிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

கிழக்கு டெல்லியில், சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக அனைத்து போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் களத்தில் உள்ளனர். அங்கு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்கள் மற்றும் அதிக நடமாட்டம் கொண்ட பகுதிகளில் வான்வழி கண்காணிப்பை மேற்கொள்ள போலீசார் டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில், தரை வழி கண்காணிப்பு மற்றும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. எல்லை பகுதிகள் மற்றும் நகருக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் முக்கிய பாதைகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் அமைதியாக நடைபெறுவதை உறுதிசெய்ய, தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், வழக்கமான ரோந்து பணிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் மீதான விரைவான நடவடிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com