

இந்தியாவில் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 18-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு பாரத் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்கிறார். மாநாட்டிற்கிடையே, இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
இது தொடர்பாக ரஷிய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெரியும். அது பெருமளவுக்கு எங்கள் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. ஏனெனில், உக்ரைன் விவகாரத்திற்கு அமைதியான வழிகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம்.
புதிய அணுமின் நிலையங்களை அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா காத்திருக்கிறது. Su-57 ரக விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதும் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.
இவ்வாறு பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, அமெரிக்காவின் அறிவிப்பு சட்டவிரோதம் மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார்.