ரஷியா - உக்ரைன் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் - அமைச்சர் ஜெய்சங்கர்!

ரஷியா - உக்ரைன் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ரஷியா - உக்ரைன் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் - அமைச்சர் ஜெய்சங்கர்!
Published on

ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா எந்த வகையிலும் உதவ தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று உக்ரைன் வெளியுறவுத் அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

மத்தியஸ்தம் செய்யத் தயார்

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவால் எந்த வகையிலாவது உதவ முடியும் என்றால், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம்” என்றுக்கூறி, தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தராகச் செயல்படவும் இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பயணம்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது உக்ரைன் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது, ​​அவர் தனது உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் போலந்து துணைப் பிரதமர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஆகியோருடன் இருதரப்பு ஆலோசனைகளை நடத்துகிறார்.

வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்

சமீப நாட்களாக கருங்கடல் பகுதியில் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் தீவிரமாக விவாதித்தனர்.

இந்தியர்கள் மற்றும் பிற நாட்டு மாலுமிகளின் பாதுகாப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ள இந்தியா, பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com