

ரஷ்யாவில் உள்ள ஒரு மின்னணுப் பொருட்கள் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் தள்ளிவிட்டதால், ஆத்திரத்தில் அவரை மனித ரோபோ ஒன்று மீண்டும் மீண்டும் தாக்க முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடையில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு மனித உருவ சேவை ரோபோ அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
வீடியோவின்படி, கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், மரியாதைக்காக அந்த ரோபோவிடம் கைகுலுக்க முயன்றுள்ளார். அந்த ரோபோ அதற்குப் பதிலளிக்காததால், அதிருப்தி அடைந்த அவர் ரோபோவை லேசாக தள்ளிவிட்டார்.
இதனால் கோபமடைந்த ரோபோ, அவரை கால்களால் தாக்க முயன்றது. கடையில் இருந்த இருவர் ரோபோவை கட்டுப்படுத்த முயற்னர். இருப்பினும் அது ஆக்ரோஷத்தில் அவர்களையும் தாக்க முயன்றது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இதனை ‘தி டெர்மினேட்டர்’ மற்றும் தமிழில் வெளியான ரஜினிகாந்தின் ‘எந்திரன்’ படத்துடன் ஒப்பிட்டு, கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.