

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 11-ந் தேதிகளில் 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (10,167 வார்டுகள்) தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
பாஜக முன்னிலை
மொத்தம் உள்ள 10 மாநகராட்சிகளில் பாஜக 6 மாநகராட்சிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் 3 மாநகராட்சிகளிலும் முன்னிலையில் இருந்தது.
ஜெய்ப்பூர், அஜ்மீர், ஆழ்வார், உதயப்பூர், கோட்டா, பில்வாரா ஆகிய மாநகராட்சிகளில் பாஜக முன்னிலை வகித்தது. தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள 150 வார்டுகளில் பாஜக- 95, காங்கிரஸ் 43 மற்றவை-12 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
காங்கிரஸ் கட்சி ஜோத்பூர், பாலி, பிகானீர் ஆகிய 3 மாநகராட்சிகளில் முன்னிலையில் இருந்தது. பரத்பூர் மாநகராட்சியில் சுயேட்சைகள் அதிக வார்டுகளில் முன்னிலையில் இருந்தன.
மொத்தம் உள்ள 65 வார்டுகளில் இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள்-36, பாஜக-20, காங்கிரஸ் -9 இடங்களில் முன்னிலையில் இருந்தன.
இதுவரையில் மாநகராட்சியில் 403 வார்டுகள் உள்பட மொத்தம் 4,049 வார்டுகளை பாஜ கைப்பற்றியுள்ளது. காங்கிரசை பொறுத்தவரையில் 300 மாநகராட்சி வார்டுகள் உள்பட மொத்தம் 3,456 வார்டுகளில் வென்றுள்ளது.
2,438 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். ஜோத்பூர் மாநகராட்சியில் இரு கட்சிகளும் சரிசமமான இடங்களைப் பிடித்துள்ளன.
ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி அடைந்ததை அடுத்து, அம்மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மா, பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.