

ராகுல் காந்தி வியட்நாம் பயணம் குறித்து பாஜக விமர்சித்துள்ளது.
எஸ்ஐஆர் முறைகேடுகளுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியட்நாம் பயணம் குறித்து பாஜக விமர்சித்துள்ளது.
ராகுல் விமானத்தின் பிசினஸ் கிளாஸ் பிரிவில் பயணம் செய்வதை காட்டும் காணொளியை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பாஜக பகிர்ந்துள்ளது.
அந்தக் காணொளியில், நீல நிற டிஷர்ட்டும் ஏர்பாட்ஸும் அணிந்துக்கொண்டு ராகுல் கேபினில் அமர்ந்திருப்பது தெரிகிறது.
பாஜக தனது பதிவில், “பொய்களைப் பரப்புவதில் நான் சோர்வடைந்துவிட்டேன்... நான் சில நாட்கள் வியட்நாமில் சுற்றித் திரியப் போகிறேன். இதை யார் கண்டுபிடிக்கப்போகிறார்!” என்று ராகுல் காந்தி கூறுவதுபோல் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், ராகுல் காந்தி தனது தனிப்பட்ட நேரத்தில் எந்த இடத்திற்கும் செல்ல அவருக்கு உரிமை உண்டு என்று கூறி, அவரது பயணம் குறித்த செய்தியை காங்கிரஸ் கட்சி நியாயப்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் வட்டாரங்களின்படி ராகுல் காந்தி தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்திற்காக சில நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு, நான்கு நாட்களுக்கு வியட்நாம் சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அவர் அங்கு நான்கு நாட்கள் தங்குவார் என்றும் கூறப்படுகிறது.
கடைசியாக அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் கோவாவில், காங்கிரஸின் யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் காந்தி பங்கேற்றார்.
அங்கு அவர் கட்சித் தலைவர்களுடன் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தார். இதை தொடர்ந்து தொடர்ந்து, ராகுல் காந்தி இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த அக்டோபர் 12 அன்று, காங்கிரஸ் மற்றும் பிற இந்தியா கூட்டணி தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி சென்று எஸ்ஐஆர் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான மனுவை தாக்கல் செய்தனர்.
செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித், "ராகுல் காந்திக்கு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவருக்குத் தனது சொந்தப் பொறுப்புகளும் உள்ளன. அவர் எங்கு சென்றாலும், பயனுள்ள ஒன்றைச் செய்கிறார்.
சில சமயங்களில், அவர் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்திக்கிறார்; சில சமயங்களில் அறிஞர்களைச் சந்திக்கிறார். அவர் எப்போதும் நாட்டிற்குப் பயனளிக்கும் ஒன்றையே செய்கிறார்" என்று கூறினார்.
மேலும் "ராகுல் காந்தி பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார். நமது பிரதமர் அவ்வாறு செய்கிறாரா?" என்றும் சந்தீப் தீட்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும் தீட்சித் விமர்சித்தார்.